ஏன் சி நிரலி?
நான் சி நிரலியை பெரும்பாலும் பயன்படுத்துவதற்கு இருவகையான நோக்கம் உண்டு. ஒன்று, எனது எளிமை குறித்த கண்ணோட்டம் என்பதில் கூறியபடி இது மிகவும் எளிமையாகவும் குறைவான தொடரியல் மற்றும் திறவுச்சொற்களைக் கொண்டும் நேரடியாக உள்ளது. இரண்டாவது, இது ஒளிவுமறைவின்றி பலவற்றின் இயக்க முறைகளைப் புரிந்து கொள்ளுதற்கான வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. இந்த மொழி மிகவும் எளிதாக இருப்பதாலேயே, ஒரு நிரலாக்கத்திற்குத் தேவையான பலவற்றையும் நாமே செய்ய வேண்டியுள்ளது. எனவே இதைவைத்து ஒரு முழுமையான கோளாறு இல்லாத சிறப்பான மென்பொருளை உருவாக்குவதற்கு மிகவும் கவனம் தேவை. பலவற்றின் மீது முழுமையான புரிதல் கொண்டிருந்தால் தான் சிறப்பான வெற்றிகரமான பல நிரல்களை இயற்ற இயலும். இல்லையெனில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதுவே மற்ற நிரலிக்கும் இதற்கும் உள்ள ஒரு மேலோட்டமான வேறுபாடு. சி நிரலியை திறனான வகையில் பயன்படுத்த எண்ணினால், கற்றுக்கொண்ட வழிமுறைகளை முறையான நிரலகங்களாய்த் தொகுத்து பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.