முகப்பு | வலைப்பதிவுகள் | ஓவியங்கள்


அறிமுகம்

என் பெயர் தீபக் சண்முகம். இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து வருகிறேன். கணினியியற் பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றவன். தற்போது நான் மென்பொருள் தரப் பகுப்பாய்வாளராகப் பணிபுரிகிறேன்.

எனக்கு அடிப்படையான கணினி தொழில்நுட்பங்களின் மீது ஆர்வம் உண்டு. அதனால் எனக்கு சி (C) என்னும் நிரலாக்க மொழி மிகவும் பிடித்தமானது. கூடவே லினக்சு (Linux) இயங்குதளம் பிடித்துப்போனதால் அதையே எனது தனிப்பட்ட கணினியில் அன்றாடம் பயன்படுத்துகிறேன்.

மேலும் நான் பகுதி நேரமாக ஓவியம் வரைபவன். சிறு வயதிலிருந்தே ஏடுகளில் வரையத்தொடங்கி தற்போது கணினியில் கிம்ப் (GIMP), கிரிட்டா (Krita) போன்ற வரைகலை மென்பொருட்களைக் கொண்டு இலக்கமுறை வரைபடங்களை அவ்வப்போது வரைகிறேன். நான் வரைந்த சில பழைய ஓவியங்களை இங்கு காணலாம்.

தமிழ் மொழியில் தயக்கமின்றி உரையாடுவதற்கும் கற்பதற்கும் ஏற்ற சூழலைக் கொண்டுள்ள 'தமிழ்' என்னும் ஒரு டிஸ்கார்டு (Discord) வழங்கியை நடத்தி வருகிறேன். அதில் சேர விரும்புவோர் இந்த இணைப்பின் வழியே சேரலாம்.

இத்தளத்தைப்பற்றி

இது என் தனிப்பட்ட வலைப்பக்கம். நான் அறிந்ததை பகிர்தல் ஆவணப்படுத்துதல் என் பார்வை மற்றும் கருத்துகளை வெளியிடுதல் போன்ற தனிப்பட்ட நோக்கத்திற்காக இயற்றப்பட்டது. மேலும் இது மிகவும் எளிமையான வடிவமைப்பில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அதற்கேற்ப உருவாக்கியுள்ளேன். இதில் இயற்றப்படும் உள்ளடக்கங்கள் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே இருக்கும். இருப்பினும் தேவைக்கேற்ப ஆங்கில மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற தளங்கள்

தொடர்புக்கு