எளிமை குறித்த கண்ணோட்டம்
தற்போதெல்லாம் நான் எளிமையாக குறைவாக நேரடியாக உள்ளவற்றை விரும்புகிறேன். ஏனெனில் அவை எல்லா வகையிலும் நேரத்தை மிச்சப்படுத்தி கவனச்சிதறலற்ற சூழலையும் நமக்கு அளிக்கிறது. இருப்பினும் நமக்கு சில நேரங்களில் அது சலிப்பான உணர்வை ஏற்படுத்தி அதற்கு மாற்றாக வேறு ஒன்றை தேர்ந்தெடுக்க வைக்கிறது. அப்படி பல வகையான மாற்றங்களைக் கண்ட பிறகு இறுதியில் நம்மை மீண்டும் கூடிய விழிப்போடு எளிமைக்கே திரும்பச்செய்கிறது. பின்னர் அதன் அருமையையும் கட்டுப்பாடின்றி பல வகைகளில் அனைவருக்கும் எவ்வளவு உதவியது என்பதையும் நமக்கு புரியவைக்கிறது. அதுவே அதன் சிறப்பு. நீங்கள் கவனித்திருந்தால் இந்த வலைப்பக்கமும் ஒரு வகையில் அதை எதிரொலிக்க முயற்சிப்பதை அறியலாம். நான் எளிமையான வழிமுறைகளையும் செயல்முறைகளையும் முயற்சிக்கிறேன். அதனாலேயே நான் முழுவதும் எளிமையானவன் என்று பொருளல்ல. அனைத்தும் ஒரு முயற்சியும் அதன் விளைவாலும் உண்டானவையே! அதற்காக மற்றவை எல்லாம் தேவையற்றவை என்று கூறவில்லை. ஒவ்வொறு வழிமுறையும் தனக்கென ஒரு நோக்கம் கொண்டுள்ளன. நாம் விரும்பியபடி தேவைக்கு ஏற்ப எதையும் தேர்ந்தெடுக்க இயலும். உங்களுக்கு எளிமையானவை பிடிக்கவில்லை என்றாலும் ஒன்றும் தவறில்லை.